PUBLISHED ON : நவ 28, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீளமான சூரிய கிரகணம்
சூரியன், நிலவு, பூமி ஒரே நேர்க்கேட்டில் அமைந்து நடுவில் நிலவு இருக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும். இதனால் அதன் நிழல் தான் பூமியில் விழும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சூரிய கிரகணம் நிகழ்வதுண்டு.
இந்நிலையில் 2027 ஆக. 2ல் நிகழ உள்ள சூரிய கிரகணம், இந்த 21ம் நுாற்றாண்டின் நீளமான முழு சூரிய கிரகணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தெரியும். இது 6 நிமிடம், 23 வினாடி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

