PUBLISHED ON : ஏப் 08, 2026 11:37 PM

அ நிறம் | அளவு
காடுகளில் பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் நுண்துகள்கள் நிலம், நீர்நிலை பகுதிகளை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் தற்போது வனப்பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ஆய்வு தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் இருந்து விழும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் காற்றின் வழியாக வந்து, மரங்களின் உச்சிகளில் படிகிறது. பின் மழை, உதிரும் இலைகளால் தரைப்பகுதியை அடைகிறது. பின் மண்ணுக்குள் நுழைந்து, மண்ணின் வளத்தை பாதித்து, மரங்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து அதிகரித்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
