/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பெட்ரோல் உருவானது எப்படி
/
அறிவியல் ஆயிரம் : பெட்ரோல் உருவானது எப்படி
PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பெட்ரோல் உருவானது எப்படி
பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இயங்குகின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலில் வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள் இறந்தபின் நொதிக்கப்பட்டு மண்ணில் புதையுண்டன. இவை மணல், களிமண் படிவுகளால் சூழப்பட்டு நிலத்துக்கு அடியில் நிலவும் அதிகப்படியான அழுத்தம், வெப்பம் காரணமாக அடர் கருப்பு நிற எண்ணெய் வளங்களாக மாறின. இதன் பெயர்தான் கச்சா எண்ணெய். இதை சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 1866ல் அசாமில் முதல் கச்சா எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது.