/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரின் பூர்வீகம்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரின் பூர்வீகம்
PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தண்ணீரின் பூர்வீகம்
அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் அவசியம். பூமி 70 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. 1370 கோடி ஆண்டுக்கு முன் பிரபஞ்சத்தில் 'பிக் பேங்க்' எனும் பெரு வெடிப்பு ஏற்பட்டது. இதிலிருந்து 10 - 20 கோடி ஆண்டுக்குப் பின் 'சூப்பர்நோவா' (நட்சத்திரம்) வெடிப்புகளின் குப்பைகளில் தண்ணீர் முதன்முதலில் உருவாகியது என பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரஜன், ஆக்சிஜன் இணைந்தது தான் தண்ணீர். பெரு வெடிப்பின் போது ஹைட்ரஜனும், 'சூப்பர்நோவா' வெடிப்புக்கு பின் ஆக்சிஜனும் உருவாகியது என தெரிவித்துள்ளனர்.