/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பூமியின் வளிமண்டலம்
/
அறிவியல் ஆயிரம் : பூமியின் வளிமண்டலம்
PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பூமியின் வளிமண்டலம்
பூமியின் வளிமண்டலம் பல்வேறு வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இதில் அதிகமாக நைட்ரஜன் 78.08%, ஆக்சிஜன் 20.95% உள்ளது. இதுதவிர ஆர்கன் 0.93%, கார்பன் டை ஆக்சைடு 0.04%, நியான், ஹீலியம், மீத்தேன் உள்ளிட்டவை 0.0025% உள்ளன. வளி மண்டலம் ஒரு கம்பளியை போல பூமியை மூடி உள்ளதால் அதிக குளிரிலிருந்தும், அதிக வெப்பத்திலிருந்தும் பூமியை பாதுகாக்கிறது. வளிமண்டலம் 0 முதல் 1.90 லட்சம் கி.மீ., உயரம் வரை ட்ரோப்போஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மீஸோஸ்பியர், தெர்மோஸ்பியர், எக்ஸோஸ்பியர் என ஐந்து அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது.