/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பட்டு தயாரிப்பது எப்படி
/
அறிவியல் ஆயிரம் : பட்டு தயாரிப்பது எப்படி
PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பட்டு தயாரிப்பது எப்படி
பட்டு ஆடைகள் விஷேசமானது. பட்டு என்பது பட்டுப் பூச்சியின் கூடுகளில் சுரக்கும் இழை. மல்பெரி இலைகளை உண்ணும் பட்டுப்புழுக்களிலிருந்து இவை பெறப்படுகின்றன. பட்டுப் புழுவின் ஆயுட்காலம் 2 மாதம். இதன் வாழ்க்கை சுழற்சி என்பது முட்டை, லார்வா நிலை (கம்பளிப்பூச்சி), கூட்டுப்புழு (குக்கூன்), பட்டுப் பூச்சி என நான்கு வளர்ச்சி நிலைகளைக் கொண்டுள்ளது. பட்டுபூச்சிகளை வளர்த்து அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது 'செரிகல்சர்' என அழைக்கப்படுகிறது. பட்டு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

