PUBLISHED ON : ஜூன் 10, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
விமான நிறத்துக்கு காரணம்
பெரும்பாலான விமானம் வெள்ளை நிறத்தில் தான் உள்ளன. இதற்கு காரணம் உள்ளது. விமானம் பறக்கும் போதும், விமான நிலையத்தில் இருக்கும் போது சூரிய ஒளியை அதிகம் எதிர்கொள்கிறது. மற்ற நிறங்கள் அதிக வெயில், புற ஊதா கதிர்வீச்சு பட்டால் மங்கி விடும். மேலும் வெப்பத்தை விரைவாக உள்வாங்கும் தன்மை கொண்டது. இதனால் விமானம் சூடாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வெள்ளை நிறம், ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து வெப்பம் உள்வாங்காமல் தடுப்பதால், விமானம் அதிகம் சூடாகாது. இதனால் தான் வெள்ளை நிறம் தேர்வு செய்யப்படுகிறது.
தகவல் சுரங்கம்
ஆந்திராவின் ஊட்டி
ஆந்திராவின் விசாகபட்டினத்தில் இருந்து 111 கி.மீ., துாரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் 'அரக்கு பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 2990 அடி உயரத்தில் உள்ளது. இதன் சராசரி மழையளவு 1700 மி.மீ. இது 'ஆந்திராவின் ஊட்டி'என அழைக்கப்படுகிறது. பள்ளத்தாக்கு என்பது இரு மலைகளுக்கு இடையில் உள்ள ஆழமான பகுதி. பெரும்பாலான பள்ளத்தாக்குகளின் கீழே ஆறு ஓடிக்கொண்டிருக்கும். பள்ளத்தாக்குகள் யு அல்லது வி வடிவத்தில் இருக்கும். சில இரண்டும் கலந்து இருக்கும். பள்ளத்தாக்கின் அகலத்தை விட அதன் ஆழம் அதிகம்.