/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 22, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
சூரியனில் நிறங்கள் எத்தனை
சூரிய ஒளியில் அனைத்து நிறங்களும் உள்ளன. இயற்பியலில் நிறம் என்பது மின்காந்த அலையின் நீளம், அதிர்வெண். எனவே ஒவ்வொரு அலைநீளமும் ஒவ்வொரு நிறம் தான். சூரிய ஒளியில் இருக்கும் மின்காந்த அலைகளில் அனைத்து அலைநீளங்களும் உள்ளன. தாவரங்கள் வளர சூரியனின் நிறங்கள் தேவையில்லை, ஒளி போதும். ஒளிச்சேர்க்கை மூலமே தாவரங்கள் வளர, பரவ செய்கின்றன. ஒளிச்சேர்க்கை வினையில் தகுந்த அலைநீளமுள்ள சூரியக்கதிரை உறிஞ்சி வெளியிடும் பணியை தாவரங்களில் இருக்கும் நிறமி பச்சையம் செய்கிறது.
தகவல் சுரங்கம்
உலக தண்ணீர் தினம்
அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று. தண்ணீர் சேமிப்பு, பாதுகாப்பான தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதிக்கு தண்ணீர்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 300 கோடி பேர் தண்ணீர் தேவைக்கு நாடுகளின் எல்லையை கடக்க வேண்டிய சூழலில் உள்ளனர். ஆனால் உலகில் 24 நாடுகள் மட்டுமே தண்ணீர் பங்கிட்டு கொள்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளன. தண்ணீரை சேமிப்பது அனைவரின் கடமை.

