/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 23, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
ஆரஞ்சு வானம்
சூரிய குடும்பத்தில் புதன், பூமி, செவ்வாய் உட்பட எட்டு கோள்கள் உள்ளன. அண்டார்டிகாவில் சூரியன் மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான பச்சை நிறத்தில்இருக்கும். அண்டார்டிகாவின் சீதோஷ்ண நிலையே இதற்கு காரணம். செவ்வாய் கிரகத்தில் வானம் நீல நிறத்தில் தெரிவதில்லை. அங்கு ஆரஞ்சு நிறத்தில் வானம் தெரியும். சூரியனிடமிருந்து புறப்படும் ஒளிக் கதிர்கள் பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் காலம் 8 நிமிடம் 20 விநாடி. சூரியனின் மேற்புறத்தில் இருக்கும் வெப்பத்தை விட ஒரு சாதாரண மின்னலில் ஐந்து மடங்கு உள்ளது.
தகவல் சுரங்கம்
உலக வானிலை தினம்
உலக வானிலை அமைப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 1950 மார்ச் 23ல் துவங்கப்பட்டது. இத்தினம் உலக வானிலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. காலநிலை, வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஐ.நா.,வின் துணை அமைப்பாக உள்ளது. இதில் இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 'காலநிலை நடவடிக்கையில் முன்னணியில்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் 70 சதவீதம் உள்ள கடல், உலகின் வானிலை, காலநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலநிலையை பாதுகாக்க அனைவரும் உதவவேண்டும்.

