/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
ஆந்தையின் தனித்தன்மை
உயிரினங்களில் சில காலையிலும், சில இரவிலும் இரை தேடும். இதன்படி ஆந்தை இரவில் இரை தேடும் உயிரினம். அதனால் இதற்கு இரவில் கண்பார்வை நன்றாகத் தெரியும்படி இயற்கையாகவே அதன் உடல் அமைப்பு உள்ளது. ஆந்தையின் விழித்திரையில் குச்சி செல்கள் அதிகமாக இருக்கின்றன. இவை மங்கிய வெளிச்சத்திலும் செயல்படக்கூடியவை. அதனால் தான் ஆந்தையால் இரவிலும் நன்றாகப் பார்க்க முடிகிறது. பகலில் பிரகாசமான ஒளிக்கதிர்களைப் பெறக் கூடிய கூம்பு செல்கள் குறைவாக இருப்பதால் ஆந்தைக்கு பகலில் பார்வை நன்றாகத் தெரிவதில்லை.
தகவல் சுரங்கம்
உலக காசநோய் தினம்
காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ல் உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'டியூப்பர்குளோசிஸ்' பாக்டீரியா நுண்கிருமிகளால் காசநோய் பரவுகிறது. 'ஆம் காசநோயை நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2022ல் காசநோயால் 1.06 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 12 லட்சம் பேர் குழந்தைகள். 13 லட்சம் பேர் உயிரிழந்தனர். 2000ல் இருந்து சர்வதேச நாடுகளின் முயற்சியால் 7.5 கோடி பேர் உயிர் காக்கப்பட்டது. 2030க்குள் தொற்றுநோயில் இருந்து காசநோயை விடுவிக்க ஐ.நா., திட்டமிட்டுள்ளது.

