/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 27, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
மீன்கள் சுவாசிப்பது எப்படி
மனிதர்கள் மூக்கினால் சுவாசிக்கின்றனர். ஆனால் மீன்கள் அப்படியில்லை. ஏனெனில் அவற்றிற்கு மூக்கு, நுரையீரல் கிடையாது. இதனால் அவை செதில்கள் மூலம் சுவாசிக்கின்றன. செதில்கள் என்பவை அதன் தொண்டைப்பகுதியில் இருபுறமும் உள்ள பிளவுகள். இதன் மெல்லிய தோலில் நுண்ணிய ரத்த குழாய்கள்அமைந்துள்ளன. மீன்கள் நீரை வாயில் எடுத்து செதில்களால் வெளியேற்றுகிறது. செதில்களிலுள்ள ரத்தகுழாய் வழியே நீரிலுள்ள ஆக்சிஜன் எடுக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இதுதான் மீனின் சுவாசிக்கும் முறை.
தகவல் சுரங்கம்
உலக திரையரங்கு தினம்
ஐ.நா., சபை கீழ் செயல்படும் யுனெஸ்கோ முயற்சியால்1948ல் சர்வதேச திரையரங்க நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் சார்பில் மார்ச் 27ல் உலக திரையரங்கு தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் தியேட்டர் 1895ல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் கட்டப்பட்டது. அதன் பெயர் நிகெலோடியான்.
இந்தியாவின் முதல் தியேட்டர் 1907ல் மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் 'எல்பின்ஸ்டன் பிக்சர் பேலஸ்' பெயரில் உருவாக்கப்பட்டது. 1913ல் சென்னையில் துவக்கப்பட்ட 'எலக்ட்ரிக் தியேட்டர்' தான் தமிழகத்தின் முதல் திரையரங்கு.

