/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
தோசையின் சிறப்பு
பெரும்பாலனவர்களின் காலை, இரவு உணவில் தோசை இடம்பெறும். சப்பாத்தியுடன் ஒப்பிடும்போது தோசையில் மட்டும் துளைகள் விழுவதை பார்த்திருப்போம். ஏற்கெனவே அதிகச் சூட்டில் இருக்கும் தோசைக் கல் மீது மாவை ஊற்றும் போது, வெப்பம் காரணமாகக் கார்பன் டை ஆக்சைடு, மாவினுள் உள்ள காற்று வேகமாக வெப்பமடைந்து வெளியேறுகிறது. மேலும் மாவில் உள்ள தண்ணீரும் வெப்பத்தால் ஆவியாகி வெளியேறுகிறது. அதன்படி நீரும், வாயுக்களும் ஆவியாகி வெளியேறிய பகுதியில் அதன் அளவுக்கு தோசையில் துளைகள் உருவாகின்றன.
தகவல் சுரங்கம்
பெரிய மலர் தோட்டம்
ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் காஷ்மீரில் உள்ளது. இது ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் அருகே ஜபர்வான் மலை அடிவாரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு பல வண்ணங்களில் பூத்துள்ள துலிப் மலர்கள் பார்ப்பவர்களின் கண்களை ஈர்க்கிறது. பரப்பளவு 74 ஏக்கர். சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 2007ல் அமைக்கப்பட்டது. 70 வகையான 15 லட்சம் துலிப் மலர்கள் இத்தோட்டத்தில் உள்ளன. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது. 2023ல் 3000 வெளிநாட்டினர் உட்பட 3.70 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

