/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
யானை காதுகளை அசைப்பது ஏன்
நிலத்தில் வாழும் உயிரினங்களில் பெரியது யானை. இதில் ஆப்ரிக்கா ஆசிய என இரு வகை உள்ளது. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதம். யானைகள் தாவர உண்ணிகள். இலைகள், கிளைகள், மூங்கில்கள், வேர்பகுதிகளை உணவாக கொள்கின்றன. யானைகள் பெரும்பாலான நேரம் காதுகளை அசைத்துக் கொண்டிருக்கும். இப்படிக் காதுகளை அசைக்கும்போது அது தோலில் மோதி சத்தம் உண்டாக்கும். இது மற்ற யானைகளுக்கு தகவல் பரிமாற்றமாகவும் அமைகிறது. மேலும் வெயிலின் போது உடலைக் குளிர்ச்சியாக வைக்கவும் காதுகளை அசைக்கிறது.
தகவல் சுரங்கம்
உலக சுகாதார தினம்
சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப். 7ல் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப் படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்ட 1948 ஏப். 7, உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப் படுகிறது. 'நம் சுகாதாரம்; நம் உரிமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஒவ்வொருவருக்கும் சுத்தமான குடிநீர், காற்று, உணவு கிடைக்க வேண்டும் என்பதே இத்தினத்தின் நோக்கம். உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். சத்தான உணவு எடுப்பது, தினமும் யோகா, உடற்பயிற்சி செய்தால் நோயின்றி வாழலாம்.

