/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 13, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
காட்சி தோன்றுவது எப்படி
வெளிச்சம் ஏற்படும்போது ஒளிக்கதிர் நம் கண்களின் விழித்திரையில் விழுவதால் காட்சி தோன்றுகிறது. அவ்வாறு இல்லாமல் இருளிலும், விழி மூடியிருக்கையிலும் தெரியும் காட்சி போலிதான் 'ஒளியறு காட்சிப்போலி'. விழி மூடிய நிலையிலும் கண்கள், மூளையின் பார்வைப் பகுதியில் இயக்கம் நடந்துகொண்டே இருக்கிறது. இதனால் கண்கள் திறந்து இருக்கும்போது விழித்திரையில் பதியும் ஒளிக்கதிர்கள், மூடிய நிலையிலும் விழித்திரையில் ஒளி துாண்டிய துடிப்பு என தவறாக மூளை விளங்கி அதனைக் காட்சிப்படுத்த முயலும்போது நிறங்கள், காட்சி தோன்றுகின்றன.
தகவல் சுரங்கம்
ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்
ஆங்கிலேயரின் 'ரவுலட்' சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1919 ஏப்., 13ல் பஞ்சாபில் ஜாலியன் வாலபாக் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த திடலில் உள்ளே, வெளியே செல்ல ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. போராட்டத்தை கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு, ஜெனரல் டயர் தலைமையில் படையை அனுப்பியது. அப்படை மனிதாபிமானமற்ற முறையில் 10 நிமிடம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

