/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
இது முதல்முறை...
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது, வாக்காளர் அடையாள அட்டை 1993ல் அறிமுகமானது. யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கான 'நோட்டா' முறை 2014ல் அறிமுகமானது. அத்தேர்தலில் நோட்டாவுக்கு 60 லட்சம் ஓட்டு பதிவானது. அதுபோல நாம் யாருக்கு ஓட்டளித்தோம்என்பதை தெரிந்து கொள்ள 'வி.வி.பாட்' இயந்திரம்
2014 தேர்தலில் சோதனை முறையில் மத்தியசென்னை உட்பட நாட்டின் 8 தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நாம் வாக்களிக்கும் சின்னம் டிஜிட்டல் முறையில் 7 விநாடிகள் தெரியும்.
தகவல் சுரங்கம்
உலக ஹீமோபிலியா தினம்
சிறு காயம் ஏற்பட்டாலும் தொடர்ந்து ரத்தம் வருவது 'ஹீமோபிலியா'. இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அடிபட்டால் ரத்தம் உறையாமல் தொடர்ந்து வழியும். இந்நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1989 முதல் ஏப்.17ல் உலக ஹீமோபிலியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்கும் சமமான வசதி; அனைத்து ரத்தப்போக்கு பிரச்னைகளையும் அங்கீகரித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 2019ன்படி 11.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, நடுத்தர நாடுகளில் இப்பிரச்னைக்கு சிகிச்சை மேற்கொள்ளும் வசதிகள் மிக குறைவாக உள்ளது.

