/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பூமியை சூடாக்கும் பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் குப்பைகள் நீர்நிலையை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மனித உடல் உறுப்புகளுக்கு உள்ளேயும் பிளாஸ்டிக் கலப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்தை வெப்பப் படுத்துவதில் விமான துறையை விட, பிளாஸ்டிக் தொழில் இருமடங்கு காரணமாக அமைகிறது என அமெரிக்காவின் தேசிய லாரன்ஸ் பார்க்லே ஆய்வகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் விமானதுறை 100 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது. அதுவே பிளாஸ்டிக் தொழில்துறை 250 கோடி டன் கார்பனை வெளியிடுகிறது.
தகவல் சுரங்கம்
பஞ்சாயத்து ராஜ் தினம்
கிராமங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்பு தங்களின் தேவை, வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழிவகுக்கிறது. 1993 ஏப். 24ல் இச்சட்டம் அமலுக்கு வந்ததை நினைவுபடுத்தும் விதமாக ஏப். 24ல் பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 2.39 லட்சம் கிராம ஊராட்சி, 6904 ஊராட்சி ஒன்றியம், 589 மாவட்ட ஊராட்சி என 2.51 லட்சம் ஊரக உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.

