/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
ஆபத்தில் பென்குயின்
கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோபுளுரோகார்பன், ஹைட்ரோபுளுரோகார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள், பூமியின் வெப்பநிலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. இவை தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், 2100க்குள் அண்டார்டிகா பகுதியில் வாழும் 'எம்பரர் பென்குயின்' இனங்கள் 99 சதவீதம் அழிந்து விடும். வெப்பநிலை அதிகரிப்பால் பனிக்கட்டியின் பரப்பளவு குறைவதே இதற்கு காரணம் என பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே எச்சரித்துள்ளது. இவ்வகை பென்குயின்களின் நீளம் 100 செ.மீ. எடை 22 - 45 கிலோ.
தகவல் சுரங்கம்
சுகாதாரமான பணியிடம்
கட்டடம், சாலை, மின்சாரம், குடிநீர் வாரியம், சுரங்கம், அலுவலகம் உட்பட பல துறைகளிலும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவ்வாறு பணியிடங்களில் அவர்களது சுகாதாரம், பாதுகாப்பை வலியுறுத்தி உலக தொழிலாளர் அமைப்பு ஏப். 28ம் தேதியை உலக பணியிட சுகாதாரம், பாதுகாப்பு தினமாக அறிவித்தது. பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்து, நோய்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். 'பருவநிலை மாற்றத்தால் தொழில் பாதுகாப்பு, ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

