/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
மலையின் தேவை
கட்டுமானம், கற்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக மலைகள் உடைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மலைகள் சில நாட்களில் உருவாகியவை அல்ல. ஒவ்வொன்றும் உருவாக நுாற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டன. பூமியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி மலைகள் உள்ளன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதில் மலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்லுயிர்க் காடுகளின் அஸ்திவாரமாகவும், வனவிலங்குகளின் வாழ்விடமாகவும் மலை பிரதேசங்கள் உள்ளன. தண்ணீர், உணவு, சுத்தமான காற்று என அனைத்திற்கும் மலைகளை நம்பியே மக்கள் உள்ளனர்.
தகவல் சுரங்கம்
உலக சூரை மீன் தினம்
கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சம் (20 சதவீதம்) சூரை மீன் என அழைக்கப்படும் டுனா மீன். ஆண்டுதோறும் 70 லட்சம் மெட்ரிக் டன் 'டுனா' மீன்கள் பிடிக்கப்படுகின்றன. உலகில் விற்பனை செய்யப்படும் கடல் சார் உணவுகளில் 8 சதவீதம் இதுதான். இந்த மீனில் ஒமேகா-3, மினரல்ஸ், புரோட்டின், வைட்டமின் பி12 உள்ளன. உணவு, பொருளாதாரம், கடல் சுற்றுச்சூழல், உணவு சங்கிலி என முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூரை மீனை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 2ல் உலக சூரை மீன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

