/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 06, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
நிற்பது சிறந்தது
இன்றைய நவீன உலகில் நீண்டநேரம் அமர்ந்து பணியாற்றுபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிற்கும் நேரத்தை விட அதிக நேரம் உட்கார்வது உடலுக்கு தீங்கு. இந்நிலையில் குறைந்தது 5 மணி நேரம் நிற்பது (பல வழிகளில்), உட்காரும் நேரம் 6 மணி நேரத்துக்கு மிகாமல் இருப்பது, இதனுடன் நடைபயிற்சி, வீட்டுவேலை உள்ளிட்டவற்றை மேற்கொள்வது, எட்டு மணி நேர துாக்கம் போன்றவை உடல்நலத்துக்கு சிறந்தது என 2000 பேரிடம் நடத்திய ஆஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது பக்கவாதம், நீரிழிவு, இருதய பாதிப்பை குறைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
அதிகரித்த கட்சிகள்
இந்தியாவில் 1952ல் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில் தேசிய, மாநில, அங்கீகரிக்கப்படாத என மொத்தம் 53 கட்சிகள் களமிறங்கின. இது அடுத்த தேர்தலில் 15 கட்சிகள் என குறைந்தது. 1962ல் 27, 1967ல் 25, 1971ல் மீண்டும் 53 கட்சிகள் போட்டியிட்டன. பின் 1977 தேர்தலில் 34, 1980ல் 36, 1984ல் 35 கட்சி என சீராக இருந்தது. பின் 1989 தேர்தலில் முதன்முறையாக 100ஐ (113 கட்சிகள்) தாண்டியது. 1996ல் 209 கட்சிகளாக அதிகரித்தன. 2009 தேர்தலில் 363, 2014ல் 464 கட்சிகள் களமிறங்கின. 2019 தேர்தலில் மேலும் அதிகரித்து 673 கட்சிகள் போட்டியிட்டன.