/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
தாவரங்களை பாதுகாப்போம்
நாம் உணவுக்காக 80%, ஆக்சிஜனுக்காக 98% தாவரங்களை சார்ந்தே இருக்கிறோம். சுற்றுசூழலை பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச அளவில் பாதுகாப்பான வர்த்தகம், தாவரங்களை காப்பது, உணவு பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 12ல் சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் கடைபிடிக்கபடுகிறது. 'தாவர நலன், பாதுகாப்பான வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம்' என்பது இந்தாண்டு மைய கருத்து. ஆண்டுதோறும் 24 கோடி கன்டெய்னர்கள் சரக்குகள், தாவர உணவுகளை ஏற்றிக்கொண்டு நாடுகளுக்கு இடையே பயணிக்கிறது.
தகவல் சுரங்கம்
உலக செவிலியர் தினம்
நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் எப்படி முக்கியமோ. அதே போல செவிலியர்களின் சேவையும் போற்றத்தக்கது. இவர்களது சவாலான பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம் செவிலியர்கள்; நம் எதிர்காலம்; கவனித்தலின் பொருளாதார சக்தி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை (மே 12) கவுரவிக்கும் விதமாக 1974ல் சர்வதேச செவிலியர் சங்கத்தால் இத்தினம் தொடங்கப்பட்டது.