/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 13, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
சூரிய புயலுக்கு காரணம்
கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவில் சூரிய புயல் பூமியை சமீபத்தில் தாக்கியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரகாசமான ஒளி ஏற்பட்டது. சூரியனின் மேற்புறத்தில் ஏற்படும் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படும். சூரிய புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் துாண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.
தகவல் சுரங்கம்
சுற்றுலாவில் எந்த நாடு முதலிடம்
இந்தியாவில் கோடைகாலம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடாக பிரான்ஸ் உள்ளது. இங்குள்ள பாரிஸ் ஈபிள் டவர் உலக அதிசயங்களில் ஒன்று. இது தவிர, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில், 45 இடங்கள் பிரான்சில் உள்ளன. இங்கு கடந்த ஆண்டில் 7.2 கோடி பேர் சுற்றுலா சென்றனர். இப்பட்டியலில் அடுத்த இரண்டு இடத்தில் ஸ்பெயின் (7 கோடி), அமெரிக்கா (4.18 கோடி) உள்ளன.