/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
'அவகோடா'வுக்கு ஆபத்து
உலகில் பெரு, ஸ்பெயின், சிலி, கம்போடியாவில் அவகோடா அதிகம் சாகுபடி செய்யப் படுகிறது. ஏற்றுமதி செய்வதில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பம் அதிகரிப்பதால்,அவகோடா பழங்கள் அதிகமாக விளையும் பகுதிகளில் அதன் சாகுபடி 2050க்குள் 41 சதவீதம் குறையும் என ஆய்வு எச்சரித்துள்ளது. ' வெண்ணெய் பழங்கள்' என அழைக்கப்படும் அவகோடா பழத்தில் வைட்டமின், மினரல் சத்துக்கள் உள்ளன. புற்றுநோய் பாதிப்புக்கு எதிராக செயல்படுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் சுரங்கம்
சர்வதேச ஒளி தினம்
அமெரிக்க இயற்பியலாளர் தியோடர் மைமான் 1960 மே 16ல் லேசர் ஒளிக்கற்றையை இயக்கிக்காட்டி சாதித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 16ல் உலக ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் அறிவியல், கலாசாரம், கலை, கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு, எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில் லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. லேசர் (சீரொளி) என்பது ஒரே அதிர்வெண் கொண்ட, ஒரே வண்ணம் கொண்ட ஒளி. இது சாதாரண ஒளியைவிட பன்மடங்கு வலிமையானது.