/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
விண்வெளிக்கு விமானம்
அமெரிக்காவின் சியரா நிறுவனம் 'டிரீம் சேசர்' விண்வெளி விமானத்தை தயாரித்துள்ளது. செலவு ரூ. 11 ஆயிரம் கோடி. இதுதான் உலகின் முதல் பயணிகள் விண்வெளி விமானம். பத்தாண்டாக உருவாக்கப்பட்டு, சமீபத்தில் சோதிக்கப்பட்டது. இது பூமியின் குறைந்த உயர சுற்றுவட்டப்பாதையில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு (ஐ.எஸ்.எஸ்.,) பயணிகள், 3540 கிலோ எடை சரக்குகளை ஏற்றிச் செல்லும். இதன் முதல் பயணம் 2024 இறுதியில் தொடங்குகிறது. இது விமானம் போல ஓடுதளம் மூலம் பக்கவாட்டில் புறப்பட்டு, அதே போல தரையிறங்கும்.
தகவல் சுரங்கம்
தொலைத்தொடர்பு தினம்
* இன்டர்நெட், அலைபேசி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றியும், 1969 மே 17ல் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டதை நினைவுபடுத்தும் விதமாகவும் மே 17ல் உலக தொலைத்தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* உயர் ரத்த அழுத்தம் இதய பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப் படுத்துவதை வலியுறுத்தி மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 100 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

