/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
ஈர்ப்பு விசையின் சிறப்பு
பூமிக்கு ஈர்ப்பு விசை உள்ளது என 1687ல் கண்டறிந்தவர் பிரிட்டனின் ஐசக் நியூட்டன். மேலே இருக்கும் பொருட்களை தன்னிடம் தக்கவைக்க பூமி பயன்படுத்தும் ஒரு சக்திதான் புவியீர்ப்பு விசை. பூமிக்கு மட்டுமல்ல; புத்தகம், கல், நிலா என நிறை கொண்ட எல்லா பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு. நிறையையும் - விசையையும் பிரிக்க முடியாது. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால் தான் நாம் நிற்கிறோம். இதுவே விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் மிதக்க தான் முடியும். அதுபோல பூமியில் ஓரடி உயரம் குதித்தால், நிலவில் 6 அடிக்கு சமம்.
தகவல் சுரங்கம்
உலக மியூசியம் தினம்
* அருங்காட்சியகத்தின் (மியூசியம்) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 18ல் உலக அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் கலாசார பரிமாற்றம், மேம்படுத்துதல்,, அமைதியை ஏற்படுத்துவது இதன் நோக்கம்.
* எச்.ஐ.வி., வைரசால் ஏற்படும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1998 முதல் மே 18ல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் கடை பிடிக்கப்படுகிறது.

