/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
எந்த தண்ணீருக்கு அடர்த்தி அதிகம்
நல்ல தண்ணீரை விட உப்பு தண்ணீருக்கு அடர்த்தி அதிகம். நல்ல தண்ணீர் உள்ள பாத்திரத்தில் அவிக்காத, அவித்த என இரண்டு வித முட்டைகளை போட்டால், நீருக்குள் மூழ்கி விடும். இதுவே உப்புத்தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்தால் இரண்டு வித முட்டையும் மிதக்கும். உப்பு தண்ணீரில் அடர்த்தி அதிகமுள்ளதால் தான் இது நடக்கிறது. இதன் அடிப்படையில் தான் கப்பல் கடல்நீரில் அதிகமாகவும், நன்னீரில் குறைவாகவும் மிதக்கிறது. முன்னோர்கள் விதை நெல்களில் தரத்தை சோதிப்பதற்கு உப்பு தண்ணீர் முறையை பயன் படுத்தினர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் சுரங்கம்
உலக தேனீக்கள் தினம்
சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு தேனீக்கள். இவற்றிடம் இருந்து உழைப்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தேனீக்கள் பல வழிகளில் மனிதர்களுக்கு உதவியாக உள்ளன. தேனீக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும். தேன் முக்கிய உணவு. மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. தேனீ வளர்ப்பை ஊக்குவித்தால், அது தேன் சேகரிப்புக்கு மட்டுமின்றி, அயல் மகரந்தச் சேர்க்கையினால் விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும்.

