/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பூமிக்கு அருகில் சூரியன்
சூரிய குடும்பத்தில், பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. இவ்வாறு சுற்றும் போது, சூரியனுக்கு அருகிலும், தொலைவிலும் கடக்கும் நிகழ்வு நடக்கிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 365 நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் சூரியனுக்கு அப்பாலும் (அப்ஹீலியன்), ஜனவரி மாதத்தில் சூரியனுக்கு அருகிலும் (ப்ரீஹீலியன்) கடந்து செல்கிறது. தோராயமாக பூமி, சூரியனுக்கு அருகில் (ஜன.,) 14.7 கோடி கி.மீ., சூரியனுக்கு அப்பால் (ஜூலை) 15.2 கோடி கி.மீ., துாரத்திலும் இருக்கும்.
தகவல் சுரங்கம்
உபி.,யும்... பிரதமரும்...
இதுவரை 14 பேர் இந்திய பிரதமராக பதவி வகித்துள்ளனர். இவர்கள் தவிர குல்சாரிலால் நந்தா தலா 13 நாள் என இருமுறை இடைக்கால பிரதமராக பதவி வகித்தார். இந்திரா, தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன்சிங் என நான்கு பேர், பிரதமராக தேர்வான போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்கள். இதில் இந்திரா பின்நாளில் தேர்தல் களம் கண்டு மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். நேரு, லால்பகதுார் சாஸ்திரி, இந்திரா, சரண் சிங், ராஜிவ், வி.பி.சிங்., வாஜ்பாய், மோடி என 8 பிரதமர்கள் உ.பி., லோக்சபா தொகுதிகளில் இருந்து தேர்வாகினர்.