/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 27, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
வெப்பமான கோள் எது
சூரியனில் இருந்து முதலாவது கோள் புதன், இரண்டாவதாக வெள்ளி உள்ளது. இருப்பினும் புதனை விட, வெள்ளி கோள் தான் வெப்பமாக உள்ளது. இதற்கு காரணம் புதனில் வளிமண்டலம் இல்லாததால் வெப்பத்தை ஈர்த்து வைக்க முடியாது. ஆனால் வெள்ளி கோளில் அடர்த்தியான வளிமண்டலம் இருப்பதால் அதுவே சூரிய குடும்பத்தின் வெப்பமான கோளாக திகழ்கிறது. சூரியனில் இருந்து 5.7 கோடி கி.மீ. துாரத்தில் புதனும், 10.8 கோடி கி.மீ., துாரத்தில் வெள்ளியும் அமைந்துள்ளன. பூமியை ஒருமுறை சுற்ற புதன் 88 நாளும் , வெள்ளி 225 நாளும் எடுத்துக்கொள்கின்றன.
தகவல் சுரங்கம்
மெழுகு சிலை மியூசியம்
லண்டனில் 'மேடம் டுசாட்ஸ்' மெழுகு சிலை மியூசியம் உள்ளது. இதை பிரபல மெழுகு சிற்பி மேடம் டுசாட்ஸ் 1835ல் தொடங்கினார். இது அங்குள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு உலகின் பல பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 1908ல் பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்சன்ட் சர்ச்சிலின் இளம் வயது மெழுகு சிலை முதன்முதலாக காட்சிபடுத்தப்பட்டது. இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டின், நெல்சன் மண்டேலா, ஒபாமா, மகாத்மா காந்தி, பிரதமர் மோடி, சச்சின் உட்பட பலரின் மெழுகு சிலைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 16 நாடுகளில் கிளைகள் உள்ளன.

