/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : மே 29, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
புளூட்டோவில் கடல்
சிறிய கோள்களில் ஒன்றான புளூட்டோவில் உறைந்த நிலையில் கடல் நீர் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி கிளைட் டம்பஹ் 1930ல் புளூட்டோவை கண்டுபிடித்தார். துவக்கத்தில் 9வது கோளாக இருந்தது. பின் இதில் கோளின் பண்புகள் இல்லையென்பதால், சர்வதேச வானியல் அமைப்பு 2006ல் இதை குள்ளக்கோள் வரிசையில் சேர்த்தது. இது சூரியனில் இருந்து 590 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. ஒருமுறை சூரியனை சுற்றி வர 248 ஆண்டுகள் ஆகிறது. இது பூமியின் துணைக்கோளான நிலவை விட அளவில் சிறியது.
தகவல் சுரங்கம்
ஐ.நா., அமைதிப்படை தினம்
உலகில் போர், வன்முறை உள்ளிட்ட ஆபத்தான சூழல்களில் களமிறங்கி அமைதியை நிலைநாட்ட ஐ.நா., அமைதிப்படை 1945ல் உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 81 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது சேவையை அங்கீகரிக்கும் விதமாக மே 29ல் ஐ.நா., அமைதிப்படைக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'எதிர்காலத்துக்கு ஏற்றது; ஒன்றாக இணைந்து கட்டமைப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 79 ஆண்டுகளில் இப்படையை சேர்ந்த 4000 வீரர்கள் பலியாகி உள்ளனர்.