/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
சிலிகான் உற்பத்தி : யார் முதலிடம்
கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்கள் தயாரிப்புக்கு சிலிகான் தனிமம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அணு எண் 14. குறியீடு எஸ்.ஐ. வாகன உதிரிப்பாகங்களுக்கான அலுமினிய வார்ப்பு, எக்கு சுத்திகரிப்பு, வேதியியல் தொழிற்சாலை, கட்டுமான துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைந்துவிடும் சிலிகானை, 1823ல் சுவீடன் வேதியியலாளர் ஜான்ஸ் ஜேகப், முதன்முதலில் துாய்மையான வடிவத்தில் உற்பத்தி செய்தார். சிலிகான்உற்பத்தியில் 'டாப்-5' இடங்களில் சீனா, ரஷ்யா, பிரேசில், நார்வே, அமெரிக்கா உள்ளன.
தகவல் சுரங்கம்
உலக மழைக்காடுகள் தினம்
மழைக்காடுகள் என்பது பெருமளவு மழைப்பொழிவு உள்ள வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் அடர்ந்த காடு. இவையே பூமியின் பழமையான காடுகள். பூமியில் 50 சதவீத பல்லுயிரினங்களுக்கு தாயகமாக இவை அமைந்துள்ளன. உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 30 சதவீதத்தை இவை உறுஞ்சுகின்றன. இயற்கை மருத்துவத்துக்கான பல மூலிகைகள் இங்குதான் கிடைக்கின்றன. பூமியின் பாதுகாவலனாக விளங்கும் காடுகளை, அழிவதில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி ஜூன் 22ல் உலக மழைக்காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் பெரிய மழைக்காடு அமேசான்.