/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
ஆபத்தாகும் விண்வெளி குப்பை
அறிவியல் ஆய்வுக்காக உலக நாடுகள் செயற்கைக்கோள், விண்கலங்களை ஏவுகின்றன. இவை பணிக்காலம் முடிந்ததும் செயலற்று பல பாகங்களாக உடைந்து விண்வெளி குப்பையாக விண்வெளியில் சுற்றுகின்றன.இவை மணிக்கு 28,968 கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. 1 செ.மீ.,ஐ விட பெரியதாக 10 லட்சம் விண்வெளி குப்பைகள் சுற்றுகின்றன என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. இவற்றில் சில பூமியில் விழும் ஆபத்துள்ளது. 17 கோடி விண்வெளி நுண்ணிய குப்பை,விண்வெளியில் சுற்றுகின்றன என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
டாக்டர்கள், கூட்டுறவு தினம்
மேற்கு வங்கத்தின் 2வது முதல்வராக இருந்த டாக்டர் பி.சி.ராய் பல மருத்துவமனைகளை தொடங்கினார். இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை 1ல் தான். மருத்துவம், அரசியல், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்தார். இவரது சேவையை போற்றும் வகையில், இவரது பிறந்தநாள் தேசிய டாக்டர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
* இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் 1949 ஜூலை 1ல் தொடங்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும்விதமாக ஜூலை 1ல் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.