/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பால் வெண்மையாக இருப்பது ஏன்
இலை மீது பல்வேறு நிறங்களின் கலவையான சூரிய ஒளி விழுகிறது. ஆனாலும் பச்சையை தவிர மற்ற நிறங்களை இலையில் உள்ள 'பச்சையம்' நிறமிப் பொருட்கள் கவர்வதால் இலைகள் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலிக்கின்றன. கருமைப் பொருள் என்றால் எல்லா நிறத்தையும் மொத்தமாக உறிஞ்சுகிறது என பொருள். வெண்மை பிரகாசிக்கிறது என்றால் எந்த நிறத்தையும் உறிஞ்சவில்லை என பொருள். பாலில் எந்த நிறமியும் போதுமான அளவு இல்லை, அனைத்து நிறங்களும் பிரதிபலிக்கப் படுகின்றன. எனவேதான் பால் வெண்மை நிறமாக இருக்கிறது.
தகவல் சுரங்கம்
ஆறுகளின் நாடு
நாட்டின் இயற்கை வளத்துக்கு ஆறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகில் அதிக ஆறுகள் உள்ள நாடு வங்கதேசம். இது 'ஆறுகளின் நாடு' என அழைக்கப்படுகிறது. அங்கு 907 ஆறுகள் ஓடுகின்றன. இதில் பிரம்மபுத்திரா, கங்கை, ரெய்டாக், மஹானந்தா, தீஸ்தா, மேக்னா முக்கியமானவை. வங்கதேசத்தில் ஓடும் ஆறுகளில் இந்தியாவில் இருந்து 54, மியான்மரில் இருந்து 3 ஆறுகள் பாய்கின்றன. கிளை நதிகள் உட்பட மொத்த நீர்வழித்தடங்களின் துாரம் 24 ஆயிரம் கி.மீ. அதே போல வங்கதேசத்தில் தான் உலகின் பெரிய ஆற்று டெல்டா உள்ளது. இதன் பெயர் கங்கை டெல்டா.