PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
திரவ தங்கம்
தேனில் பலசத்துகள் உள்ளன. இது இயற்கையாக கிடைக்கும் இனிப்பு. 'திரவ தங்கம்' என அழைக்கப்படுகிறது. தேனீக்கள் ஒரு நாளைக்கு 45 கி.மீ., துாரம் பறக்கும். ராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என மூன்று வகை உள்ளன. ஒரு கூட்டத்தில் ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். இதுவே பெரியது. ஒரு நாளைக்கு 2000 முட்டைகள் இடும். இவற்றை கருவுறச் செய்வது, தேன் கூட்டின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது ஆண் தேனீயின் முக்கிய பணி. வேலைக்காரத்தேனீ சுறுசுறுப்பானவை. தேன் சேகரிப்பு உள்ளிட்ட பணியை செய்கிறது.

