PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஏன் நீல நிறம்
விஞ்ஞானி சர்.சிவி.ராமன், 'கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது' என்ற கேள்விக்கு விடை தேடி ஆராய்ந்து 1928 பிப்.28ல், 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார். இத்தினமே (பிப்.28) தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுருவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது. இதன்படி அதிகமாக சிதறல் அடையும் நீல நிறத்தால் கடல் நீர் இவ்வாறு தெரிகிறது' என கண்டுபிடித்தார். இதற்காக 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.