PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பேசும் மரம்
ஆப்ரிக்காவில் காணப்படும் அகாசியா மரங்களிடம் விந்தையான குணம் உள்ளது. இதன் இலைகளை ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் சாப்பிட நேர்ந்தால் உடனே, 'எத்திலின்' ரசாயன வாயுவை வெளியிடுகிறது. இது காற்றில் பரவி அப்பகுதியில் உள்ள மற்ற சக அகாசியா மரங்களுக்கு 'ஒட்டகங்கள் பசியோடு வருகின்றன' என்ற வகையில் எச்சரிக்கை செய்கிறது. உடனே மற்ற அகாசியா மரங்கள் தற்காப்பு நடவடிக்கையில் இறங்கி 'தனின்' எனும் வேதியியல் சுரப்பை வெளியிடும். இதனால் அந்த இலைகளை விலங்குகள் உண்ணாது.

