/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : செங்கடலில் திக்... திக்...
/
அறிவியல் ஆயிரம் : செங்கடலில் திக்... திக்...
PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
செங்கடலில் திக்... திக்...
அரேபிய தீபகற்பம் - ஆப்ரிக்கா இடையில் செங்கடல் அமைந்துள்ளது. பரப்பளவு 4.3 லட்சம் சதுர கி.மீ. சராசரிஆழம் 1610 அடி. இந்நிலையில் செங்கடலின் அடிப்பகுதியில் ஒரு 'கொலைகார குளம்' இருப்பதை அமெரிக்காவின் மியாமில் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு உப்பு நீர் ஏரி. இதில் சிக்கி விட்டால் உடனே உயிரை பறித்து விடும் என
எச்சரிக்கின்றனர். இயற்கையாக அமைந்துள்ள இக்குளத்தில் அதிகப்படியான உப்பு, ஜீரோ ஆக்சிஜன் நிறைந்துள்ளது. இதனால் இதில் சிக்கும் உயிரினங்கள் உயிரிழக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.