உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 04, 2026 12:12 AM

அ நிறம் | அளவு
இந்த ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் ஆக. 12ல் நிகழ்கிறது. சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது, குறுக்கே வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் அதன் நிழல் பூமியில் விழுகிறது. இதுதான் சூரிய கிரகணம். இந்தமுறை முழு சூரிய கிரகணம் 2 நிமிடம் நீடிக்கும்.
அமாவாசை தினத்தில் தான் சூரிய கிரகணம் நடைபெறும். கிரீன்லாந்து, வடக்கு ரஷ்யா, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின், போர்ச்சுகல் சில பகுதி, அமெரிக்காவின் சில பகுதிகளில் இது தெரியும். இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. அடுத்த சூரிய கிரகணம் 2027 பிப். 6ல் நிகழ உள்ளது.
