உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 07, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
நெதர்லாந்தின் ஜூவோலியில் உள்ள செயற்கை ஏரியில், 2020ல் மிதக்கும் சோலார் நிலையம் அமைக்கப்பட்டது. 70 ஆயிரம் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சோலார் பேனல்களுக்கு கீழ் 'பயோ குடில்கள்' நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது இவற்றின் கீழ் நுாற்றுக்கணக்கான மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சோலார் பேனல்கள் பறவைகளின் பார்வையை மறைப்பதால், குடில்களில் வாழும் மீன்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
