உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 21, 2026 07:11 AM

அ நிறம் | அளவு
நாசாவின் 'பெர்சிவிரன்ஸ் ரோவர்', செவ்வாய் கோளில் தொடர்ந்து பல விண்கற்கள் விழுந்ததன் காரணமாக உருவான பிரமாண்டமான அடுக்குப் பாறை அமைப்பைக் கண்டறிந்துள்ளது. இதன் நீளம் 245 அடி. 390 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம். இந்த ரோவர், செவ்வாய் கோளில் இதற்கு முன் கண்டுபிடித்த பாறைகளில், இதுதான் பழமையானது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
காலநிலை, உயிரினங்கள் வாழும் சூழல், பாறை துகள்களின் மாதிரியை சேகரித்தல் உள்ளிட்ட ஆய்வுக்காக 'பெர்சிவிரன்ஸ் ரோவர்' 2021ல் செவ்வாய்க்கு அமெரிக்காவின் 'நாசா' அனுப்பியது.
