உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
வெளிச்சம் ஏற்படும்போது ஒளிக்கதிர் நம் கண்களின் விழித்திரையில் விழுவதால் காட்சி தோன்றுகிறது. அவ்வாறு இல்லாமல் இருளிலும், விழி மூடியிருக்கையிலும் தெரியும் காட்சிப் போலிதான் 'ஒளியறு காட்சிப்போலி'. விழி மூடிய நிலையிலும் கண்கள், மூளையின் பார்வைப் பகுதியில் இயக்கம் நடந்துகொண்டே இருக்கிறது.
இதனால் கண்கள் திறந்து இருக்கும்போது விழித்திரையில் பதியும் ஒளிக்கதிர்கள், மூடிய நிலையிலும் விழித்திரையில் ஒளி துாண்டிய துடிப்பு என தவறாக மூளை விளங்கி அதனைக் காட்சிப்படுத்த முயலும்போது நிறங்கள், காட்சிகள் தோன்றுகின்றன.
