உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 01, 2026 09:14 AM

அ நிறம் | அளவு
பூமியில் இருந்து 400 கி.மீ., உயரத்தில் சர்வதேச விண் வெளி மையம் இயங்குகிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் ஓலக் கோனென்கோ.
ரஷ்யாவை சேர்ந்த இவர் 2008ல் இருந்து இதுவரை 5 முறை விண்வெளிக்கு சென்றுள்ளார். இதுவரை 1111 நாட்கள், விண்வெளியில் தங்கி ஆய்வு செய்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் ரஷ்ய வீரர் கென்னடி படல்கா உள்ளார். இவர் 878 நாட்கள் தங்கி ஆய்வு செய்துள்ளார்.
