உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 02, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
பூமியின் மேல் அடுக்கு பாறைகளால் ஆனது.
இவற்றில் சில இடத்தில் திடமாகவும், சில பாறைக்குழம்பாகவும் இருக்கும். பாறைக்குழம்பு அதிகமாகும் சேரும்போது, கடுமையான அழுத்தம் காரணமாக வெப்பமான கற்குழம்பு வெடித்து வெளியேறும். இதுவே எரிமலை. உமிழப்படும் எரிமலைக் குழம்பு ‘மாக்மா’ எனப்படும். இதில் ‘சிலிகா’ வேதிப்பொருள் அதிகமாக இருக்கும். தொடர்ந்து உமிழ்பவை எரியும் எரிமலை எனவும், பழங்காலத்தில் உமிழ்ந்து தற்போது அமைதியாக இருப்பதை உறங்கும் எரிமலைகள், இதுவரை உமிழாமல் இருப்பவற்றை அழிந்து விட்டவை என அழைக்கப்படுகிறது.
