உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 28, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
வால் ஆட்டுவது, புருவங்களின் அசைவுகள் என நாய்கள் தன் உணர்வுகளை மனிதர்களுக்கு தெரிவிக்க பல வழிகளைக் கொண்டுள்ளன. இந்நிலையில் வளர்ப்பு நாயின் கண்களை நீங்கள் உற்று நோக்கும் போது, அது கண் சிமிட்டினால், உங்களிடம் ஏதோ விஷயத்தை தெரிவிக்கவோ, நெருக்கமான சமூக பிணைப்பை ஏற்படுத்தவோ நினைக்கிறது என இத்தாலியின் பர்மா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.
35 நாய்களிடம், மனிதர்களின் கண் சிமிட்டும் வீடியோக்களை காண்பித்ததில், மற்றவர்களை விட, நாய் உரிமையாளர்கள் கண் சிமிட்டுவதை பார்த்ததும் நாய்களின் கண் சிமிட்டும் வேகம் அதிகரிப்பதை கண்டறிந்தனர்.
