உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 29, 2026 12:16 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம் :
விபத்தை தடுக்கும் இருக்கை
இந்தியாவில் ஆண்டுக்கு 4.8 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக ஒரு 'நவீன டிரைவர் இருக்கையை' சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் 'இன்டெலிசீட்'. இந்த இருக்கையில் பொருத்தப் பட்ட பிரஷர் சென்சார்கள், டிரைவரின் அசைவுகள், அமரும் நிலை ஆகியவற்றை சென்சார் செய்து, டிரைவர் சோர்வு, துாக்க கலக்கத்தில் இருப்பதாக உணர்ந்தால் முதலில் விளக்குளை ஒளிர செய்யும், இரண்டாவது முறையும் தொடர்ந்தால் அலாரம் ஒலிக்கும். மூன்றாவதாக இருக்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தி டிரைவரை எச்சரிக்கை செய்கிறது.
