தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மார் 05, 2015 11:00 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2015 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரணப் பெயர்கள்

பூக்காமல், காய்க்காமல் கடைசி வரை வெறும் இலைகளாக மட்டுமே இருப்பதால் வெற்றிலை எனப்பெயர் வந்தது. அதைப்போல பூத்துவிட்டு கடைசிவரை காய்க்காமலே இருக்கும் தாவரத்தை 'காயா' என்றனர். காயா என்பது தமிழ் இலக்கணத்தில் எதிர்மறையை குறிக்கும். காய்க்காமலே இருப்பதால் தான் 'காயா'. தில் மலரும் பூவை காயாம்பூ என்றனர். நீலநிறங் கொண்ட திருமாலை குறிக்க 'காயாம்பூ மேனியன்' எனும் பெயர் இதனால் வந்தது. காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் காயாம்பூ பூத்ததாக தமிழ் இலக்கியம் கூறுகிறது.

தகவல் சுரங்கம்

பெண்களின் வரலாறு மாதம்

மார்ச் 8ல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மார்ச் மாதம் முழுவதையுமே உலகப்பெண்கள் தினமாக கொண்டாடுகின்றன. 'ஹிஸ் ஸ்டோரி' - 'அவனின் கதை' என்பது தான் 'ஹிஸ்டரி' என மருவியது என்பர். ஆண்களால் எழுதப்பட்ட வரலாறு ஆண்களை மட்டுமே மையப்படுத்தியது; முதன்மைப்படுத்தியது. நாகரிகம், பண்பாடு, வரலாற்றில் பெண்களின் பங்கு குறித்து அறியவும் அறிந்தவற்றைப் பரப்பவும் பெண்களின் வரலாற்று மாதமான மார்ச்சில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us