தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்: 'கிழக்கின் வெனீஸ்'

அறிவியல் ஆயிரம்: 'கிழக்கின் வெனீஸ்'

அறிவியல் ஆயிரம்: 'கிழக்கின் வெனீஸ்'


PUBLISHED ON : மே 02, 2019 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2019 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரளாவில் உள்ள ஆலப்புழா, 'கிழக்கின் வெனீஸ்' என அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியின் வெனிஸ் நகரம், 118 சிறிய தீவுகளைக் கொண்டது. இதனை 'மிதக்கும் நகரம்' என்பர். இங்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு படகில்தான் செல்வார்கள். அதே போல ஆலப்புழாவிலும் படகு போக்குவரத்து அதிகளவில் உள்ளன. கடற்கரையை ஒட்டிய ஆலப்புழா நகரில் கால்வாய்கள், காயல்கள், பீச் ஆகியவை உள்ளன. இங்குள்ள படகு வீடுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்கு ஆண்டுதோறும் படகு போட்டிகளும் நடக்கின்றன. கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது.

தகவல் சுரங்கம்: உயரமான ஏரி


உலகின் உயரமான ஏரி என அழைக்கப்படுவது தென் அமெரிக்காவில் உள்ள 'டிட்டிகாகா ஏரி'. இது பொலிவியா மற்றும் பெரு எல்லையில் ஆன்டஸ் மலைத்தொடரில் உள்ளது. நீர்பிடிப்பு பரப்பளவு மற்றும் நீர் கொள்ளளவு ஆகியவற்றில் தென் அமெரிக்காவின் பெரிய ஏரியாக திகழ்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 12,507 அடி உயரத்தில் உள்ளது. ஏரியின் அதிகபட்ச நீளம் 190 கி.மீ. அதிகபட்ச அகலம் 80 கி.மீ. அதிகபட்ச ஆழம் 922 அடி. இதன் நீர்பிடிப்பு பரப்பளவு 8,372 சதுர கி.மீ. 1343 ஆண்டுகளுக்கு முன் உருவானவை என தொல்லியல் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us