PUBLISHED ON : பிப் 13, 2024 12:00 AM
கண்ணீர் கசிவது எப்படி
கண்கள் உலர்ந்துவிடாமல் ஈரமாக இருப்பதற்காக, நம் கண்களில் எப்போதும் சிறிதளவு கண்ணீர் கசிந்து கொண்டு இருக்கும். துக்கம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிப் பெருக்கில் கண்ணிலிருந்து கண்ணீர் வரும். எல்லாத் தசைகளையும் போலவே கண்ணிலும் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. அவை மெலிதாக இருப்பதால் எளிதில் புலப்படாது. கண்ணீர்ச் சுரப்பி கூடுதலாகக் கண்ணீர் சுரக்க வேண்டும் எனில், கூடுதல் ரத்தம் பாயவேண்டும். இதன் காரணமாக கண்ணீர் சிந்தும் சமயத்தில் ரத்த நாளம் விரிகின்றன. இதனால் கண் சிவப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
தகவல் சுரங்கம்
ரேடியோ, பெண்கள் தினம்
ஐ.நா., சார்பில் பிப். 13ல் உலக ரேடியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜேம்ஸ் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே எதிரொலி அடிப்படையில் மின்காந்த அலையை, ஒலி அலையாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர். பின் ஹென்றிச் ஹெர்ட்ஸ் மின்காந்த அலையை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்தார்.
* சுதந்திர போராட்ட வீரர் சரோஜினி நாயுடு. விடுதலை பற்றி கவிதை, பாடல் எழுதியுள்ளார். இவரது பிறந்த நாள் பிப். 13ல் தேசிய பெண்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.