/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: பிளாஸ்டிக் ஆபத்து
/
அறிவியல் ஆயிரம்: பிளாஸ்டிக் ஆபத்து
PUBLISHED ON : மார் 29, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பிளாஸ்டிக் ஆபத்து
பிளாஸ்டிக் நுண்துகள்களின் பாதிப்பு உயர்ந்த மலை, கடல், சுவாசிக்கும் காற்று என அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. நம் உடல் உறுப்புகளுக்கு உள்ளும் பிளாஸ்டிக் நுண்துகள் கலப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் மெல்லும் சுவிங்கத்தில் இருந்து நுாற்றுக் கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்கள் வெளியேறி வாய்க்குள் செல்கின்றன என பாரிசில் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 1.5 கிராம் சுவிங்கத்தில் 600 பிளாஸ்டிக் நுண்துகள் வெளிப்படுகிறது. ஆண்டுக்கு 180 சுவிங்கம் சாப்பிடுபவர்களுக்கு 30 ஆயிரம் நுண்துகள் வெளிப் படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.