/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : ஆபத்தாகுமா விண்வெளி குப்பை
/
அறிவியல் ஆயிரம் : ஆபத்தாகுமா விண்வெளி குப்பை
PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஆபத்தாகுமா விண்வெளி குப்பை
பல்வேறு ஆய்வுக்காக செயற்கைக்கோள், விண்கலத்தை உலக நாடுகள் அனுப்புகின்றன. விண்வெளியில் சுற்றும் இவை, பயன்பாடு முடிந்ததும் விண்வெளி குப்பையாக (செயற்கைக்கோளின் உடைந்த பாகம்) மாறி சுற்றி வரும். இதனால் ஆபத்து உள்ளது என பல ஆய்வுகள் தெரிவித்த நிலையில், 'கடந்த 50 ஆண்டுகளில் தினமும் ஒரு விண்வெளி குப்பை பூமியின் ஏதாவது ஒரு இடத்தில் விழுகிறது. இதனால் ஒருவருக்கு பெரிய காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதில்லை. ஏனெனில் விண்வெளி குப்பை, பூமியின் வளிமண்டலத்துக்குள் வரும்போதே எரிந்து விடும் என அமெரிக்காவின் 'நாசா' தெரிவித்துள்ளது.

