உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 11, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பூமிக்கு அருகில் நிலவு
இந்த ஆண்டின் மூன்றாவது சூப்பர்மூன் அக்.,17ல் தோன்றுகிறது. இந்தாண்டில் பூமிக்கு மிக அருகில் (3.5 லட்சம் கி.மீ., துாரம்) வரும் சூப்பர் மூன் இதுதான். இந்தியாவில் மாலை 4:56 மணிக்குப்பின் தெரியும். பூமி -- நிலவு இடையே 3.84 லட்சம் கி.மீ, என்ற சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும். ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி (நடுவில்), நிலவு வரும்போது 'சூப்பர் மூன்' ஏற்படுகிறது. அடுத்து நவ.,15ல் தோன்றும்.
