/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தொழுநோயை ஒழிப்போம்
/
அறிவியல் ஆயிரம் : தொழுநோயை ஒழிப்போம்
PUBLISHED ON : ஜன 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தொழுநோயை ஒழிப்போம்
உலகில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 120 நாடுகளில் பாதிப்பு உள்ளது. இது 'மைக்கோபாக்டீரியம் லெப்ரோமாடோசிஸ்' பாக்டீரியாவால் உருவாகிறது. இது குணப்படுத்தக்கூடியது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் சார்பில் உலகளவில் ஜனவரி மாத கடைசி ஞாயிறு, இந்தியாவில் ஜனவரி 30ல் தொழுநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஒன்றுபடு, செயல்படு, ஒழித்திடு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் விரைவில் குணப்படுத்தலாம்.